
கண் நோய் பரவாமல் இருப்பதை குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்…
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது பொதுவாக காலநிலை மாறுபடும்போது கண் நோய்கள் ஏற்படுவது வழக்கம், அந்த வகையில் தற்போது விழி வெண்படல அலர்ஜி காரணமாக கண்கள் சிவப்பதால் கண்களில் நீர் வடிதல், கண்கள் ஒட்டிக்கொள்ளுதல், கண் கூசுதல் போன்றவை ஏற்பட்டு கண் மருத்துவமனைகளை நாடுவோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், பள்ளிகளில் சிறுவர் சிறுமியர் அருகில் அமர்வதன் மூலமும் கண் நோய்கள் பரவக் கூடும் என்றும் மேலும் பாக்யானது வைரஸ் தொற்றுகள் மூலமும் கண்கள் இருந்து வெளியேறும் கசிவுகள் மூலம் இது பரவுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர், எனவே கண் நோய் பரவல் குறித்து விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தவும் கண் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் இதற்கான மருந்துகளை போதிய அளவில் இருப்பின் வைத்துக் கொள்ளவும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்..!!