கண் புருவத்தை அழகாக்கும் சூப்பர் சீரம்..!!எப்படி பயன்படுத்துவது.?

பெண்கள் என்றாலே அழகுதான். அதிலும் அவர்களின் கண்தான் அந்த பெண்ணிற்கு அழகை மேலும் மெருகூட்டுகிறது. அப்படிப்பட்ட கண்களுக்கு மேல் உள்ள புருவமும் அழகாக இருந்தால்தான் பார்க்க அழகாக இருக்கும், புருவம் அழகாக இருந்தால்தான் கண்கள் அழகாக தெரியும். கண்கள் அழகாக இருந்தால்தான் முகம் பிரகாசமாய் அழகாய் தெரியும்.

கண்களுக்கு அழகை தரக்கூடிய புருவங்கள் மெல்லியதாக பார்க்க அசிங்கமாக இருந்தால் ஐப்ரோ பென்சிலை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இனிமேல் எந்த கவலையும் வேண்டாம். வீட்டிலேயே இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் இந்த சீரம் தடவி புருவத்தை அழகாக மாற்றிக் கொள்ளலாம்.

சீரம் செய்ய தேவையான பொருட்கள்

  1. கற்றாழை ஜெல் -2 டீஸ்பூன்
  2. தேங்காய் எண்ணெய் -ஒரு டீஸ்பூன்
  3. ஆமணக்கு எண்ணெய்- ஒரு டீஸ்பூன்
  4. விட்டமின் ஈ கேப்ஸ்யூல்- ஒன்று

செய்முறை

ஒரு கண்ணாடி கிண்ணத்தில் மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் நன்கு கலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். கற்றாழை ஜெல் தண்ணீர் பதம் என்பதால் நன்றாக அடித்து கலக்க வேண்டும். இப்படி கலக்கும்போது ஒரு ஜெல் போன்ற திரண்டு வரும். அப்போது சீரம் தயாராகிவிட்டது. இந்த சீரத்தை புருவத்தில் பிரஸ் உதவியுடன் அப்ளை செய்ய வேண்டும்.

இதில் எண்ணை மட்டுமே இருப்பதால் உங்கள் கண்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது. இந்த சீரத்தை தினமும் இரவில் கண்களிலும் இமைகளிலும் அப்ளை செய்து வருவதால் நன்றாக தூங்கலாம். அதோடு கருவளையம் நீங்கும்.

புருவத்தில் மாற்றம் ஏற்படும். கண் புருவங்களை அடிக்கடி கவனித்துக் கொள்வது மற்றும் தூய்மைப்படுத்துவது மிகவும் அவசியம். ஆனால் முகத்தில் அழகை கவனித்துக் கொள்ளும் அளவிற்கு கண் புருவங்களை கவனித்துக் கொள்வது இல்லை என்பதுதான் நிதர்சனம், புருவங்களை அடிக்கடி சுத்தம் செய்வதால் சருமத்திற்கும் கண் இமைகளுக்கும் ஆரோக்கியத்தை அளிக்கின்றது.

Read Previous

ஒத்த கறிவேப்பிலையில், இத்தனை நன்மைகளா.!! முழு விபரம் உள்ளே..!!

Read Next

பல நோய்களை தடுக்கும் அற்புதப்பழம்.! இத்தனை நாளா தெரியாம இருந்தோமே.?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular