மதுரை கரிமேடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (43) என்பவர் ஆரப்பாளையம் பேருந்து நிலைய அருகே ஹோட்டலில் கேசியராக வேலை செய்கிறார். சம்பவத்தன்று, கடைக்கு வந்த 2 பேர், பணம் கொடுக்காமல் பரோட்டா கேட்டு உள்ளனர். அதற்கு கேசியர் பணம் கேட்டபோது, தாங்கள் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து கழுத்தில் வைத்து மிரட்டி பரோட்டா வாங்கியுள்ளனர். இதுகுறித்து ரமேஷ் அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகள் ராஜேஸ் (22), ஸ்ரீவசந்த் (20) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.