Oplus_131072
1) கந்த சஷ்டி விரதம் இருக்கும் முறைகள்!
1. மிளகு விரதம்
2. இளநீர் விரதம்
3. துளசி தண்ணீர் விரதம்
4. பால் விரதம்
5. பால் மற்றும் பழ விரதம்
6. ஒரு வேளை உணவு விரதம்
இதில் நீங்கள் எந்த விரத முறையை தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள் என்று முடிவு செய்து கொள்ளவும்!
( 7 நாட்களும் ஒரே ஒரு முறையை கடைப்பிடித்து கொள்ளவும், இடையில் மாற்றம் வேண்டாம்)
குறிப்பு:
1. எந்த விரதம் இருந்தாலும் தண்ணீர் அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும்
2. மருந்துகள் கட்டாயம் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால், ஒரு வேளை உணவு விரதம் இருக்கலாம்
3. மிளகு விரதம் இருப்பவர்கள், முதல் நாள் ஒரு மிளகு, இரண்டாம் நாள் இரண்டு மிளகு முறையே மற்ற நாட்களுக்கும் எடுத்து கொள்ள வேண்டும்.
4. மிளகு, இளநீர், பால், பழம் எதுவாக இருந்தாலும் முருகப்பெருமானின் படத்தின் முன் வைத்து பூஜை வழிபாடு செய்து உட்கொள்ளலாம்.
5. ஒரு வேளை உணவு விரதத்தில், ஏதாவது ஒரு வேளை மட்டும், காலை அல்லது மதியம் அல்லது இரவு நேரத்தில் உணவு எடுத்து கொள்ளலாம்.




