டெல்லியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மேலும் பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததை அடுத்து சாலைகள் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் மக்கள் வாழும் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது டெல்லியில் தொடர் கனமழையால் கடந்த 2 நாட்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி வரை கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.