
கடந்த சில தினங்களாகவே அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இதன் காரணமாக அசாமில் உள்ள 29 மாவட்டங்கள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றது.
அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகின்றது.இதனால் ஆறுகளின் நீர்வரத்து அதிகம் ஆகி உபரி நீர் ஊருக்குள் புகுந்து உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு அவர்களின் வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர். அதிலும் குறிப்பாக மழையினால் பாதிக்கப்பட்ட கவுகாத்தி,மலைகான்படுதாக் உள்ளிட்ட பகுதிகளை மாநிலத்தின் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்மா சர்மா நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சேத மதிப்புகள் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் கணக்கிடப்படும் என்றும் அதன் பின் மக்களுக்கு தகுந்த நிவாரண உதவி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 56 பேர் பலியாகியுள்ளனர். காசிரங்கா உயிரியல் பூங்காவுக்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளதால் 17 விலங்குகள் இறந்தது, மேலும் கனமழையினால் பெய்த வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட 72 விலங்குகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் உள்ளனர்.