கனவில் குழந்தைகள் அழுதால் அதிர்ஷ்டமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை குறிக்கின்றன.

கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும் அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது ஆபத்து குறித்து ஆழ் மனம் எச்சரிப்பதாக அமைகின்றது.

நாம் தூங்கும் போது வரும் கனவுகள் சிலருக்கு நினைவில் இருக்கும். சிலருக்கு இருக்காது.கனவு அறிவியலின் படி, நமது கனவுகளில் சில நனவாகும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு நாம் கணவில் காணும் பல விடயங்களுக்கு காரணம் இருக்கின்றது அந்த வகையில் குழந்தைகள் அழுவது போல் கனவு கண்டால் என்ன பலன் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கனவில் குழந்தைகள் அழுதால்…

பொதுவாக, சிறு குழந்தைகள் கனவில் தென்பட்டால், வாழ்க்கையில் சில நல்ல செய்திகள் விரைவில் வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இது வீட்டிற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருவதாகவும் கருத வேண்டும்.

அதே கனவில் சற்றே வயது கூடிய குழந்தைகளைப் பார்த்தால், வாழ்க்கையில் சாதகமான மாற்றம் ஏற்படப் போகிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் கனவில் சிறு குழந்தைகள் அழுவதை நீங்கள் கண்டால், உங்கள் ஆசைகளில் ஒன்று விரைவில் நிறைவேறும் என்று கனவு அறிவியலில் குறிப்பிடப்படுகினறது.

அதே சிறு குழந்தைகள் சிரித்துக்கொண்டே இருப்பதைப் பார்த்தால் பாதியில் நிறுத்தப்பட்ட முக்கியமான வேலை மீண்டும் தொடரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி, நீங்கள் நிதி ரீதியாகவும் பயனடையலாம். உங்கள் கனவில் இரட்டைக் குழந்தைகளைக் கண்டால், பதவி உயர்வு வரும் மேலும், கனவில் இரட்டைக் குழந்தைகளைக் கண்டால்,  வேலையில்  பதவி உயர்வு கிடைக்கும்.

புதிதாக பிறந்த குழந்தையை கனவில் கண்டால் உங்கள் நண்பர்கள் அல்லது நெருங்கிய உறவிர்களுக்கு குழந்தை பிறக்கும் என்றும் கனவு பற்றிய அறிவியல் குறிப்பிடுகின்றது.

Read Previous

தம்பதியர்களுக்கான டிப்ஸ்: குழந்தை பெற உடலுறவு கொள்ள வேண்டிய நாள்கள்..!!

Read Next

ரயில்வேயில் 7,951 பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular