• September 12, 2024

கனவில் சிங்கம் வருவது நல்லதா கெட்டதா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் தூக்கம் என்பது அவசியமான ஒன்றாகும். அப்படி தூங்கும் போது கனவு வருவது இயல்பான விடயம்.

கனவுகளில் நல்லதும் இருக்கலாம் கெட்டதும் இருக்கலாம். நாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு பலன்கள் இருப்பதாக கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

கனவில் நாம் பார்க்கும் ஒவ்வொரு விடயமும் நம்முடைய ஆழ் மனம் நமக்கு வழங்கும் எச்சரிக்கையாக இருக்கும். அந்த வகையில் கனவில் சிங்கத்தை பார்த்தால் என்ன பலன் என்பது குறித்த தெளிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிங்கம் கனவில் தோன்றுவதன் பலன்கள்:

பொதுவாக கனவில் சிங்கத்தைப் பார்ப்பது வலிமை, தைரியம், உறுதிப்பாடு மற்றும் சக்தியைக் குறிக்கும். உங்கள் கனவில் சிங்கம் உங்களையோ அல்லது வேறு யாரையோ தாக்குவதைக் காணவில்லை என்றால், அதன் அழகில் உங்கள் ஆழ் மனம் கவரப்பட்டிருக்கிறது.

அல்லது அதன் மூர்க்கத்தனத்தைக் கண்டு நீங்கள் வியந்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.அதன் விளைவாகவே சிங்கம் கனவில் தோன்றியிருக்கும்.

ஒரு சிங்கம் உங்களைத் துரத்துவது போல் கனவு கண்டால், யாரோ ஒருவர் உங்களை அச்சுறுத்துவதாகவோ அல்லது தீங்கு விளைவிப்பதாகவோ அல்லது யாரோ ஒருவர் உங்கள் மீது அதிகாரம் வைத்திருப்பதாகவோ உணர்கிறீர்கள் என்று அர்த்தம்.

சில சந்தர்ப்பங்களில், சிங்கம் உங்களைத் துரத்துவது உங்கள் போட்டித் தன்மையையும் உங்களுக்காக நிற்க வேண்டியதன் அவசியத்தையும் ஆழ் மனம் எச்சரிப்பதாக அர்த்தம்.

சிங்கம் அமைதியாக அமர்ந்திருப்பது போல் கனவு வந்தால் நினைத்த காரியம் விரைவில் நடக்கும் என அர்த்தப்படும் அதே சமயம் சிங்கம் கோபமாக இருப்பது போல் கனவில் தோன்றினால் எண்ணிய காரியம் நடப்பதில் தாமதம் ஏற்படும் என அர்த்தம்.

சிங்கம் துறத்துவது போல் கனவு வந்தால் அரசாங்கம் சம்பந்தப்பட்ட விடயங்களில் பிரச்சினை ஏற்படப்போகின்றது என அர்த்தம்.

அதே சமயம் சிங்கம் மேலே பாய்ந்து உங்களை கடிப்பது போல் கனவில் தோன்றினால் எதிரிகளால் ஏதோ பிரச்சினை ஏற்பட போவதையே இந்த கனவு உணர்த்துகின்றது.

சிங்க குட்டியை கனவில் கண்டால் நண்பர்களுடனான உறவு மேம்படும் என அர்த்தம். மேலும் சிங்கத்தின் மீது சவாரி செய்வது போல் கனவில் தோன்றினால் சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும் என்று கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.

Read Previous

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – நேர்காணல் மட்டுமே..!! சம்பளம்: ரூ.35,000/-..!!

Read Next

அறிந்து கொள்ளுங்கள் சிவபெருமானுக்கு உரிய முக்கிய விரதங்களை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular