ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, நாம் கனவில் காணும் சிலவற்றைக் கொண்டு தான் அது நமக்கு நல்லதா, கெட்டதா என்பதை கூற முடியும்.
உதாரணமாக, நம்மில் பலர் கனவில் சில விலங்குகளைக் காண்போம்.
அப்படி கனவில் வரும் ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொன்றைக் குறிக்கிறது.
இப்போது ஒருவரது கனவில் பாம்பு வந்தால், அது நல்லதா, கெட்டதா என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
நிறைய பாம்புகளை காண்பது
கனவில் நிறைய பாம்புகளை ஒருவர் கண்டால், அவருக்கு சில பிரச்சனைகள் வரப் போகிறது என்று அர்த்தம்.
ஆனால் அந்த பாம்புகளை கொன்றால் அல்லது கனவில் அவற்றை நீங்கள் விரட்டினால், உங்களுக்கு வரவிருக்கும் நெருக்கடியைப் பற்றி நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்று அர்த்தம்.
இறந்த பாம்பை காண்பது
ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, ஒருவர் கனவில் இறந்த பாம்பைக் கண்டால், வரும் காலம் உங்களுக்கு நன்றாக இருக்கும் என்று அர்த்தம்.
ஆனால் கனவில் பாம்பு பற்களைக் கண்டால், உங்களுக்கு நெருக்கமான ஒருவர் உங்களுக்கு துரோகம் செய்யப் போகிறார் என்று அர்த்தம்.
வெள்ளை அல்லது தங்க நிற பாம்பு
ஸ்வப்ன சாஸ்திரத்தின் படி, நீங்கள் உங்கள் கனவில் வெள்ளை அல்லது தங்க நிறத்தில் பாம்பைக் கண்டால், உங்களுக்கு ஒரு பெரிய அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது என்று அர்த்தம்.
ஆனால் மீண்டும் மீண்டும் பாம்பை கண்டால், உங்களுக்கு பித்ரு தோஷம் இருப்பதாக அர்த்தம்.
பாம்பு கடிப்பது
ஒருவரது கனவில் பாம்பு கடிப்பது போன்று வந்தால், கஷ்டம் நம்மை விட்டு விலகப் போகிறது என்று அர்த்தம். கடன் தொல்லை பிரச்சனையால் கஷ்டப்பட்டு வருபவர்களுக்கு தீர்வு கிடைக்கப் போகிறது என்று அர்த்தம்.
அதுவும் கனவில் வெள்ளைப் பாம்பு கடித்தால், அது மங்களகரமானதாக கருதப்படுகிறது.