கப நோய்களிலிருந்து காக்கும் தூதுவளை..!!

மூலிகை என்றாலே உடலுக்கு தேவையான நோய்களை தடுப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மூலிகையின் செயலாகும் அதேபோல் கப நோய்களிலிருந்து காக்கும் தூதுவளை உடலுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் என்று அகத்தியர்கள் கூறுகின்றனர்…

தூதுவளை இருந்தால் உடலில் உள்ள நோய்கள் எல்லாம் பறந்து விடும் என்று முதியவர்கள் கூறுவது வழக்கம், கப நோய்களை நீக்குவது முதல் வீரிய விருந்தை உண்டாக்குவது வரை தூதுவளை மூலிகைக்கு சகல வல்லமை உள்ளது என அகத்தியர் குணவாகடம் கூறுகிறார், சைடோஸ்டிரால், சொலசோடின், சபோனிஸ் ஃப்ளேவனாய்ட்ஸ் போன்ற வேதிபொருட்கள் நிறைந்துள்ள இதன் நிலை உலர்த்திய பொடியுடன் சிறிது மிளகுத்தூள் தேன் சேர்த்து கொடுக்க சளி இரும்பல் மட்டுமின்றி வயிற்று உப்புசமும் குறை என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர், மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நெஞ்சு சளி உள்ளவர்கள் இரும்பல் உள்ளவர்கள் தூதுவளையை ரசமாக வைத்து குடிப்பதன் மூலம் உடலில் உள்ள சளி நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்..!!

Read Previous

ஆதார் கார்டு புதுப்பிப்பு..!! இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு.!!

Read Next

முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular