கரண்ட் பில்லை குறைக்க உதவும் 7 எளிய வழிமுறைகள்..!!

Oplus_131072

கரண்ட் பில்லை குறைக்க உதவும் 7 எளிய வழிமுறைகள்….

இன்று பலருக்கும் மின்சாரத்தை தொட்டால் அடிக்கும் ஷாக்கை காட்டிலும் மின் கட்டணபில்லை பார்த்தால் அடிக்கும் ஷாக் தான் பெரிதாக இருக்கின்றது. ஒவ்வொரு மாதமும் சம்சாரம் தரும் மளிகை பில்லும், மின்சாரம் தரும் மாதாந்திர பில்லும் குடும்ப தலைவர்களை குழைநடுங்க வைக்கிறது.
எனவே நாம் மின்சார பில்லை குறைக்க என்ன என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் பார்ப்போம்.

👇
1)
நீண்ட கோடைகாலத்தின் வெப்பம் நம்மை தாக்காமல் இருக்க நமது வீடு அறையை குளிர்விக்கும் பணியை செய்யும் ஏ.சி இயந்திரம் மின்சார கட்டணத்தை தாறுமாறாக ஏற்றிவிடும் பணியையும் சேர்த்து செய்கிறது. வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள பலரும் ஏ.சி யை 18 டிகிரி செல்சியஸில் இயங்க செய்து அறைய அண்டார்டிகாவாக மாற்றி வைத்திருப்பார்கள். இவ்வாறு செய்வதால் அறையை குறிப்பிட்ட அளவு குளிர்விக்க ஏ.சி நீண்ட நேரம் இயங்க வேண்டுயுள்ளது.

இதன் விளைவாக மின்சார பயன்பாடு உயர்ந்துக்கொண்டே போக மின் கட்டணம் மாத இறுதியில் பெரும் சுமையாக வந்து நிற்கும். உங்கள் ஏ.சியின் டெம்ரேஸரின் அளவு 24 அல்லது 25 செல்சியஸில் செட் செய்தீர்களேயானால் உங்களது அறையானது போதுமான அளவு குளிர்விக்கப்படுவதோடு மின்சார கட்டணமும் பல மடங்கு குறைகிறது.

2)
அடுத்ததாக பலரும் இன்னமும் தங்கள் வீடுகளில் இன்னமும் சாதாரண இன்கேண்டிஸன் பல்புகளையே பயன்படுத்து வருகின்றனர். இந்த பல்பு ஒன்றின் விலை 10ரூபாயாக இருந்தாலும் சி.எப்.எல், எல்.ஈ.டி பல்புகளை காட்டிலும் 10 மடங்கு மின்சாரத்தை விழுங்கக்கூடியது. எனவே உங்கள் வீடுகளில் இங்காண்டிஸன் பல்புகள் இருந்தாலும் அதனை அகற்றிவிட்டு விலை சற்று கூடுதலாக இருந்தாலும் எல்.ஈ.டி பல்புகளி வாங்கி பொருத்துங்கள். இதனால் மின்சார கட்டணத்தை பெருமளவு மிச்சப்படுத்தலாம்.

மேலும் பலரும் தங்கள் வீட்டில் எந்த அறையில் எத்தனை வாட் பல்பு பொருத்த வேண்டும் என்பதை அறிவதில்லை. உதாரணமாக கழிவறைகளில் மட்டும் குளியலறைகளில் அதிக திறன் கொண்ட பல்புகளை பொருத்தி இருப்பார்கள். கழிவறை மட்டும் குளியலறை சென்றுவிட்டு லைட்டை அணைக்க மறந்துவிடுபவர்களும் உண்டு. இதனால் தேவையற்ற மின்னழப்பு ஏற்படும். எனவே அதிகம் பிரகாசமான வெளிச்சம் தேவைப்படாத இடங்களில் திறன் குறைந்த பல்புகளை பொருத்தவேண்டும். இதனால் தேவையற்ற மின்னழப்பை குறைத்தும், மின்சார கட்டணத்தை குறைத்து மின் கட்டணத்தை மிச்சமாக்கலாம்.

3)
டி.வி, டி.வி.டி பிளேயர், மியூசிக் சிஸ்டம் எலெக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்திய பின்னர் அவற்றை சுவிட்ஆப் செய்து ஸ்டேண்ட் பையில் விட்டுவிடுவது பெரும்பாலானவர்களின் வாடிக்கை. எலெக்ட்ரானிக் சாதனங்களை ஸ்விட்ச் ஆப் செய்தாலும் கூட அவை ஸ்டேண்ட் பை மோடில் இருக்கும் பொது குறிப்பிட்ட அளவும் மின்சாரத்தை விழிங்கி கொண்டேதான் இருக்கும். மேலும் மொபைல் போன், லேப்டாப் போன்வற்றை சார்ஜ் செய்தவுடன் உடனே சார்ஜர் பிளக்கை கழற்றிவிட வேண்டும். இல்லையேல் சிறிய அளவிலான மின்சாரத்தை சார்ஜர் உறிஞ்சிக்கொண்டே இருக்கும். எனவே எலெக்ட்ரானிக் சாதனங்களின் தேவை முடிந்தபின் அவை முழுமையாக ஸ்விட் ஆப் செய்யப்பட்டு உள்ளதா என்பதனை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

4)
அடுத்ததாக பழைய சி.ஆர்.டி டி.வி மற்றும் கம்பியூட்டர் மானிட்டர் போன்றவை எல்.ஈ.டி டி.வி, எல்.ஈ.டி மானிட்டரை காட்டிலும் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கக்கூடியதாகும். எனவே ஷோரூம்கள் தரும் ஏதாவது விழக்கால ஆப்பர்களை பயன்படுத்தி பழைய சி.ஆர்.டிவிகளை எல்.ஈ.டி டிவிகளாக மாற்றுவதன் மூலம் மின்சார கட்டனத்தை குறைக்கலாம். அதேபோல் உங்கள் வீட்டின் நீர் மோட்டாரை அடிக்கடி ஆயில் சர்வீஸ் செய்து இலகுவாக இயங்கும் படி பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் கடினமாக ஓடும் நீர் மோட்டார் கூடுதல் மின்சாரத்தை எடுத்துக்கொள்ளும்.

5)
உங்களது மாதாந்திர மொத்த மின்சாரம் பயன்பாட்டில் சுமார் 25% உங்கள் ஃப்ரிட்ஜ் பயன்படுத்துக் கொள்கிறது. என்வே ஃப்ரிட்ஜின் குளிர்விக்கும் திறனை குறைவாக வைத்திருங்கள். மேலும் ஃப்ரிட்ஜ் கதவின் ரப்பரை அவ்வப்போது பரிசோதித்து ஃப்ரிட்ஜிக்குள் உள்ள குளிர் காற்று லீக்காகாகமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றை செய்வதால் ஃப்ரிட்ஜால் மின்சாரம் வீணாவதை தவிர்க்கலாம்.

6)
எலெக்ட்ரிக் ஸ்டவ்வில் சமையல் செய்பவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே ஸ்டவ்வை ஆப் செய்வதன் மூலம் ஸ்டவ்வில் எஞ்சி இருக்கும் வெப்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் மின்சாரமும் மிச்சமாகும் ஸ்டவ்வில் உள்ள வெப்பமும் வீணாகாது. அதேபோல் மைக்ரோவேவ் ஓவன் பயன்படுத்துவோர் ஃப்ரிட்ஜில் உள்ள பொருட்களை சமைப்பதற்கு முன்பாக சுமார் 10 முன்பாகவே வெளியில் எடுத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் அவற்றை அறையின் வெப்பநிலைக்கு கொண்டு வருவதும், சமைப்பதற்கும் ஆகும் மின்சக்தி தேவைப்படுவதில்லை.

7)
துணி துவைக்கும் வாஷிங் மெஷினை எப்போது ஆப்லோடாக இயக்குவதை தவிர்க்கவும். அதேபோல் ஓவர்லோடாக இயக்கிவதையும் தவிர்க்கவும், இவை இரண்டும் தேவையற்ற மின்சார செலவினத்தை ஏற்படுத்தும். அதேபோல் உகந்த அளவு தண்ணீரையும், டிடர்ஜெண்டையும் பயன்படுத்த வேண்டம், இதனால் வாஷிங்க் மெஷின் துணிகளை துவைக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளாது. மேலும் துவைத்து முடித்த பின் வாஷிங்க்மெஷின் ஸ்டேண்ட் பை மோடில் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சிக்கனம் செய்யலாம்.

Read Previous

முகச்சுருக்கத்தை நீக்க உதவும் பலாப்பழ கொட்டை..!!

Read Next

நொடி பொழுதில் பல் வலியை போக்கும் நாட்டு வைத்தியம்..!! அனுபவ உண்மை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular