கருக்கலைப்பு செய்த செவிலியர் பரிதாப பலி..!!

தர்மபுரி: அரூர் எல்லை குளையன்பட்டி பகுதியை சேர்ந்தவர் வல்லரசு. இவரது மனைவி சங்கீதா. இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சங்கீதாவுக்கு ரத்த அழுத்த குறைபாடு நோய் உள்ளது. இதற்காக அவர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடை யே கருத்தரித்த அவர் உடல் நலக்குறைபாடு இருந்ததால், கருக்கலைப்பு செய்தார். இதனால் மேலும் அவரது உடல்நிலை மோசமானதை அடுத்து கடந்த 31ஆம் தேதி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சேர்ந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த, சங்கீதா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Read Previous

அயோத்தியில் திடீர் நிலநடுக்கம்..!!

Read Next

நேபாளத்திற்கு புறப்பட்ட இந்திய விமானப்படை விமானம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular