
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது, சீமானின் இந்த பேச்சுக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் என்பவர் கரூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார், அதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார், இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் என்பவர் கரூர் நீதிமன்றத்தில் கொடுத்த புகாரின் பேரில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி பிறப்பித்த உத்தரவை அடுத்து கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை காவல் நிலையத்தில் குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இச்சம்பவம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சடை செய்துள்ளது..!!