
Oplus_131072
கருப்பட்டி அல்வா..!! இப்படி செஞ்சு பாருங்க அம்புட்டு ருசியா இருக்கும்..!!
200 கிராம் கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்துக்கு நன்றாக பிசைந்து எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் மூடி போட்டு மூடி வைக்க வேண்டும். ஒரு மணி நேரம் நன்றாக ஊரண பிறகு கையில் கரைத்து பால் எடுக்கவும். கரைத்த சக்கையை மறுமுறையும் அரை டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து பால் எடுத்து முதல் பாலுடன் சேர்த்து இரண்டு மணி நேரம் தெளிய விட்டு தண்ணீரை வடித்து பாலை மட்டும் பிரித்து எடுக்கவும். பிறகு 400 கிராம் கருப்பட்டியை அரை கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
அடிகனமான பாத்திரத்தில் கருப்பட்டி நீரை ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும். மாவில் இருந்து பிரிந்த பாலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து பகுடன் சேர்த்து கிளற வேண்டும். ஐந்து நிமிடங்களில் லேசாக கெட்டிப்படும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சிறிது நேரம் நன்றாக கிளற வேண்டும். பின்பு சிறிது சிறிதாக நெய் அல்லது எண்ணெய் சேர்த்து 45 நிமிடங்கள் கிளற வேண்டி இருக்கும். இறுதியாக நெய் பிரிந்து வந்த அல்வா கெட்டியாகும் பக்குவத்தில் வருத்தம் முந்திரி மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கி இறக்கினால் கம கம கருப்பட்டி அல்வா தயார். கண்டிப்பா நீங்களும் உங்க வீட்ல இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க. குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் அனைவரும் விரும்பி சாப்பிடுவாங்க.