உடலுக்கு ஆரோக்கியம் தரும் கருப்பு உளுந்து இட்லி பொடி..!! இப்படி அரைத்தால் வீடே மணக்கும்..!!

Oplus_131072

 

கருப்பு உளுந்தில் கஞ்சி காய்ச்சி குடிக்க முடியாது. கலி கிண்டியும் சாப்பிட முடியாது. கருப்பு உளுந்தில் இட்லிக்கு மாவு அரைத்தும் சாப்பிட முடியவில்லை. கருப்பு உளுந்து பொடி செய்து வைத்துக் கொண்டால் தினமும் சாப்பிடலாம் அல்லவா? உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய கருப்பு உளுந்து இட்லி பொடி சுலபமாக சுவையாக எப்படி அரைப்பது?குறிப்பாக பெண்கள் தினமும் இந்த கருப்பு உளுந்தை உணவோடு சேர்த்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

முதலில் கருப்பு உளுந்து – 250 கிராம், வரமிளகாய் – 200 கிராம், கடலை பருப்பு – 100 கிராம், கட்டி பெருங்காயம் – 25 கிராம், மிளகு – 2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு, இந்த பொருட்களை சரியான அளவுகளில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு ஏற்ப வரமிளகாயை குறைத்துக் கொண்டாலும் தவறு கிடையாது.

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி முதலில் அதில் பெருங்காயம் கட்டிகளைப் போட்டு சிவக்க வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக கருப்பு உளுந்தை சேர்த்து அதே கடாயில் வறுக்க வேண்டும். கருப்பு உளுந்தை சிவக்க சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். வறுத்த கருப்பு உளுந்தை எடுத்து வாயில் போட்டு கடித்து சாப்பிட்டால், சாப்பிடும் பக்குவத்திற்கு உளுந்து வரவேண்டும்.

அடுத்தபடியாக கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க சிவக்க வறுத்து இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். அடுத்தபடியாக வரமிளகாயை கடாயில் சேர்த்து லேசாக சூடாகும் வரை வறுத்து இதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக மிளகை சேர்த்து, மிளகை 3 நிமிடம் போல வறுத்து எடுத்துக் கொண்டால் போதும். எல்லா பொருட்களையும் ஒரே தட்டில் கொட்டி நன்றாக ஆற வைத்துக் கொள்ளுங்கள்.

காய்ந்த கருவேப்பிலை இருந்தால் இந்த பொடியோடு சேர்த்துக் கொள்ளலாம். இல்லை என்றால், கருவறையையும் எண்ணெயில் நன்றாக வறுத்து பருப்பு வகைகளோடு சேர்த்து பொடி செய்து கொள்ளுங்கள். சூடுஆறிய எல்லாப் பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொண்டால் மணக்க மணக்க கருப்பு உளுந்து இட்லி பொடி தயார்.

தினமும் இட்லி தோசைக்கு சாம்பார் சட்னி தொட்டு சாப்பிட்டாலும் கூட ஒரு ஸ்பூன் இந்த இட்லிபொடியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். எலும்புகள் வலுப்பெற,ஏதோஒரு வகையில் கருப்பு உளுந்து உணவாக உடம்பில் கலக்கிறது அல்லவா.

Read Previous

மகன் தந்தைக்குச் செய்யும் உதவி அவன் உள்ளம் குளிர நடந்து கொள்வதைத் தவிர வேறு என்ன இருக்க முடியும்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

சண்டே ஸ்பெஷல்..!! கார சாரமான பெப்பர் சிக்கன் இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular