கொண்டைக்கடலை என்றாலே நமக்கும் மிகவும் பிடிக்கும். இதில் பல சத்துக்கள் இருக்கிறது என்று நமக்குத் தெரிந்தாலும் இதன் சுவை தான் நம்மை அதிகமாக சாப்பிட வைக்கிறது. அதிலும் கருப்பு கொண்டை கடலை மிகவும் ஆரோக்கியமானது.
எப்போதும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் முக்கியம். அப்படி இந்த கருப்பு கொண்டைக்கடலையில் இருக்கும் சத்துக்கள் என்னென்னவென்று இந்த பதிவில் காண்போம்.
இந்த கொண்டைக்கடலை நமது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. யாரெல்லாம் தனது உடல் எடையை குறைக்க நினைக்கிறார்களோ அவர்கள் இந்த கருப்பு கொண்டைக்கடலையை நிச்சயம் சாப்பிடலாம்.
மேலும் உடற்பயிற்சி செய்வோருக்கு புரதச்சத்து கிடைக்க இந்த கொண்டைக்கடலை மிகவும் சரியான ஒரு தேர்வாகும். ஆனால் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அதிகமாக இதை உட்கொள்ளக்கூடாது. ஆகையால் உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த கருப்பு கொண்டைக்கடலையை அளவோடு சாப்பிட்டு நமது உடலுக்கு நம்மால் முடிந்தவரை ஆரோக்கியத்தை சேர்ப்போம்.




