கருப்பு திராட்சையும், சிவப்பு திராட்சையும் இருக்கே.. இதுல எது பெஸ்ட்ன்னு கேக்குறீங்களா?
ரெண்டுமே நம்ம உடம்புக்கு ரொம்ப நல்லதுதான்! ஆனா சின்ன சின்ன வித்தியாசம் இருக்கு!
சிவப்பு திராட்சையில ஒரு ஸ்பெஷலான ஆன்டிஆக்சிடன்ட் நிறைய இருக்கு – ரெஸ்வெராட்ரோல்னு சொல்லுவாங்க!
அது நம்ம ஹார்ட்டுக்கு ரொம்ப நல்லது பண்ணும்!
அப்புறம் கேன்சருக்கு எதிராகவும் வேலை செய்யும்னு சில ஆய்வுகள் சொல்லுது! சில வகையான ஆன்டிஆக்சிடன்ட்கள் சிவப்புல கொஞ்சம் அதிகமா இருக்கு!
கருப்பு திராட்சையிலயும் நிறைய ஆன்டிஆக்சிடன்ட்கள் இருக்கு! குறிப்பா அந்தோசயானின்கள்னு சில கலர்ஸ் இருக்கு, அது நம்ம செல்ஸை டேமேஜ் ஆகாம பாத்துக்கும்!
சில வைட்டமின்கள், தாதுக்கள் கருப்புல கொஞ்சம் ஜாஸ்தியா இருக்ககு!
ஆனா ரெண்டுலயுமே கலோரி கம்மிதான்! வைட்டமின் சி, கே, பொட்டாசியம், நார்ச்சத்து எல்லாம் நிறைய இருக்கு!
நம்ம ஹார்ட்டுக்கு ரெண்டுமே நல்லது!
ரத்த அழுத்தத்தை கண்ட்ரோல் பண்ணவும், கண்ணுக்கு நல்லது பண்ணவும் உதவும்!
எது நல்லதுன்னு கேட்டா?.
ரெண்டுமே சூப்பர்தான்! உங்க டேஸ்ட்டுக்கு எது பிடிச்சிருக்கோ அதை சாப்பிடலாம்! இல்லன்னா ரெண்டையுமே மாத்தி மாத்தி சாப்பிட்டா எல்லா சத்துக்களும் கிடைக்கும்! எப்படியோ நம்ம உடம்புக்கு நல்லது பண்ணா சரிதானே..




