நம் முன்னோர்கள் காலகட்டத்தில் இருந்து கருப்பு நிற ஆடைகளை அணியக் கூடாது என்று நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். பொதுவாக நாம் கோயில் மற்றும் திருமணம், வளைகாப்பு போன்ற சுப காரியங்களுக்கு செல்லும் பொழுது கருப்பு நிற ஆடைகளை அணிந்தால் நாம் வீட்டில் உள்ள பெரியோர்கள் திட்டி அதை மாற்றி வா வேறு ஆடை அணிந்து வா என்று கூறுவார்கள். ஏன் கருப்பு நிற ஆடையை அணியக்கூடாது. வேறு எந்த நிற ஆடைக்கும் இது போன்ற கட்டுப்பாடு இல்லை. ஆனால், கருப்பு நிறத்திற்கு மட்டும் ஏன் அப்படி என்று நாம் சிந்திப்போம். கருப்பு நிற ஆடையை ஏன் அணியக் கூடாது என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
கருப்பு என்பது சனிபகவானுக்கு மிகவும் பிடித்த நிறம் என்பதாலும், கருப்பு நிறம் அதிகப்படியான எதிர்மறை ஆற்றலை தரக்கூடிய ஒரு நிறம் என்று நம்புவதாலும் கருப்பு நிறம் என்றாலே அசுபமாக கருதப்படுகிறது. மேலும் கருப்பு நிறம் காளி தேவியை குறிக்கிறது. காளியின் தாக்கத்தால் அமாவாசை இரவு அன்று முழுவதுமாக இருள் சூழ்ந்து விடும் என்பது ஐதீகம். இதனால் வாழ்க்கையில் அவர் அனைத்து வண்ணங்களையும் நீக்கி கருமையை கொடுப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தான் கருப்பு நிறம் என்றாலே பெரியோர்கள் பயப்படுகிறார்கள். இதனால்தான் கருப்பு நிறம் அசுபம் என்று கருதப்படுகிறது. விசேஷ நாட்களிலும் சுப நிகழ்ச்சிகளிலும் கருப்பு நிற ஆடைகளை அணிவதால் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து நல்ல நிகழ்ச்சிகளில் கெட்டது நடக்க வாய்ப்பும் அதிகம் என்ற ஒரு பயத்தால் தான் பெரியவர்கள் சுப நிகழ்ச்சிகளுக்கும் கோயில்களுக்கும் செல்லும் பொழுது கருப்பு நிற ஆடையை அணிவதை தவிர்க்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.




