
கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்கக்கூடாது..!! ஏன் தெரியுமா..??
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே கரும்பு சாப்பிட்டால் உடனே தண்ணீர் குடிக்க கூடாதுன்னு சொல்லுவாங்க. அதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா..?? அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
கரும்பை கடித்து சுவைத்து முடித்த பிறகு மெலிதாக தாகம் எடுக்கும் அவ்வாறு தாகம் எடுக்கும் பொழுது உடனே தண்ணீரை குடிக்கக்கூடாது. அப்படி குடித்தால் வாய் வெந்துவிடும். கரும்பு சாப்பிட்டு முடித்து அரை மணி நேரம் கழித்து தான் தண்ணீர் அருந்த வேண்டும் ஏன் தண்ணீர் உடனே குடித்தால் வாய் வேகிறது என்று தெரியுமா. கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படக்கூடிய கால்சியம் அதிகம் இருக்கிறது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாக மாறுகிறது. அந்த சமயத்தில் தண்ணீர் குடிக்கும் பொழுது அது அதிகமான சூட்டை கிளப்பும். இதனால்தான் நாக்கு வெந்து விடுகிறது. கொஞ்சம் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்துவதால் எந்த விதமான பாதிப்பும் வராது.