கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்ககூடாது ஏன் என்று தெரியுமா..??

Oplus_131072

 

பொங்கல் பண்டிகை முடிந்து மறுநாள் கரும்பு தின்ற குழந்தைகளின் வாய் வெந்திருபதை கண்டு பதறி, டாக்டரிடம் அழைத்துசெல்லும் பெற்றோர்களை மாநகரங்களிலும் சிறு நகரங்களிலும் பார்க்கலாம். காரணம், அந்தப் பிள்ளைகள் கரும்பு தின்ற உடனே தண்ணீர் குடித்திருப்பார்கள். அதன் காரணமாக, வாய் முழுக்க நமைச்சல் எடுக்கும் சிறு கொப்புளகள் தோன்றியிருக்கும்.

கரும்பு தின்ற உடன் தண்ணீர் குடிக்க கூடாது என்பது அந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் தெரிந்து வைத்து கொண்டிருக்க மாட்டார்கள். அதனால் தங்கள் குழந்தைகளை எச்சரிக்கை செய்ய முடியாமல் போய்விடும். ஆனால் பெரும்பாலான, கிராமபுறங்களில் இந்த அவதிகள் கிடையாது. அங்கு பெரியவர்கள் கரும்பு தின்னும் குழந்தைகளிடம் ‘எலெ தண்ணீய குடிசுடாதே வாய் வெந்துடும்’ என்று தொடர்ந்து எச்சரிக்கை செய்து கொண்டே இருப்பார்கள்.

கரும்பை கடித்து சுவைத்து முடித்த பிறகு மெலிதாக தாகம் எடுக்கும். உடனே தண்ணீரை மொண்டு மடமடக் என்று குடித்து விடாதீர்கள். அப்படி செய்தால் வாய் வெந்து விடும். கரும்பு சாப்பிட்டு முடித்து பதினைந்து நிமிடங்கள் கழிந்த பிறகே தண்ணீர் அருந்த வேண்டும்.

கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படகூடிய கால்சியம் அதிகம் இருக்கிறது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது. அந்த சமயத்தில் தண்ணீர் குடிக்கும் போது அதிகமான சூட்டைகிளப்பும் எதிர்வினை நடக்கிறது. இதனால் நாக்கு வெந்து விடுகிறது. கொஞ்சம் இடைவெளி விட்டு தண்ணீர் அருந்துவதால் இந்த பாதிப்பு வருவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

Read Previous

பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள்..!!

Read Next

தேர்வு இல்லாமல் மத்திய அரசு வேலை..!! ரூ.29,000 வரை சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular