கருவேப்பிலை கண்களுக்கு ஆரோக்கியம் மட்டுமல்லாமல் முடி வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது, வீட்டில் இருப்பவர்கள் உணவில் கருவேப்பிலையை ஒதுக்காது என்று சொல்லுவது வழக்கம் காரணம் கருவேப்பிலையில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கிறது..
கைப்பிடி அளவு கருவேப்பிலை எடுத்து ஒரு டம்ளர் வெந்நீரில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும் பிறகு வழிகாட்டி அதனுடன் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்றாக கலக்கி குடித்து வந்தால் ரத்தத்தை சுத்தப்படுத்தும், செரிமான பிரச்சனை சீராகும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும், முடி வளர்ச்சி அதிகரிக்கும், உடல் எடை குறையும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மேலும் கொழுப்பு கரையும் உணவில் கருவேப்பிலையை ஒதுக்காமல் சேர்த்துக் கொள்வதன் மூலம் கண்களுக்கு தேவையான வெளிச்சத்தை தருகிறது மேலும் கண்களில் உள்ள ரெட்டினா செல்லை வலுப்படுத்தி கண்களுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது..!!




