நமது வீட்டில் சமையலுக்கு அடிக்கடி உபயோகிக்கும் பொருட்கள்தான் கருவேப்பிலை மற்றும் பூண்டு. இதை தினமும் வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால் பல நற்குணங்கள் நமது உடலுக்கு கிடைக்கும். மேலும் ஒரு மாதம் தினமும் ஐந்து கருவேப்பிலை ஒரு பல் பூண்டை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்று இந்த பதிவில் தெளிவாக காண்போம்.
கருவேப்பிலை மற்றும் பூண்டில் இருக்கும் மருத்துவ குணங்கள் நமது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க மிகவும் உதவி வருகிறது. ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இது ஒரு முக்கிய பங்கை வகித்து வருகிறது. பூண்டில் இருக்கும் சல்பர்கள் மற்றும் கருவேப்பிலையில் இருக்கும் பொட்டாசியம் கலவை ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
செரிமான மண்டலங்கள் ஆரோக்கியமாக இருக்க இவை மிகவும் உதவி செய்து வருகிறது. இதை சாப்பிட்ட பின்பு ஒரு டம்ளர் சுடு நீரை நாம் குடிக்க வேண்டும். இப்படி செய்வதனால் நமது உடலில் இருக்கும் நச்சுகள் வெளியேறிவிடும். அது மட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமை ஆகும்.




