கருவை கலைக்க அனுமதி கேட்டு நீதிபதி முன் விஷம் குடித்த இளம்பெண்..!! பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு நடந்த சோகம்.!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள படாவுன் பகுதியில் இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறா.ர் இவருக்கும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரூர்கே பகுதியை சார்ந்தவர்க்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து அவ்வப்போது தனிமையில் உல்லாசமாய் இருந்ததாய் கூறப்படுகிறது.மேலும் திருமண வாக்குறுதி அளித்த இளைஞர் பெண்ணின் விருப்பத்துடன் நெருங்கி உள்ளார். ஆனால் காலப்போக்கில் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த இளைஞர் அவரிடமிருந்து விலக முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே பெண்மணி கர்ப்பமாகியுள்ளார். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரியின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்தனர், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தனது நான்கு மாத கருவை கலைக்க அனுமதி கேட்டு பெண்மணி நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு விசாரிக்க விசாரணையின் போது பெண் நீதிபதிகள் முன்பு  திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கும் முயன்றார். இதனால் பதறிப்போன நீதிபதிகள் உடனடியாக நீதிமன்ற பணியாளர்களின் உதவியுடன் பெண்ணை மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பினர்.

முதல் கட்ட விசாரணையில் இளைஞரின் உறவினர்களான செல்வந்தர்கள் பெண்ணின் புகாரை வாபஸ் பெற கூறி மிரட்டி வந்ததும் தெரிய வந்தது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

Read Previous

குக்கர் விஷயத்தில் அலட்சியமாக இருக்குறீங்களா?: சமையலின்போதே வெடித்துசிதறிய குக்கர்..!! அதிர்ச்சி காட்சிகள் வைரல்.!!

Read Next

பைக் திருடி சிக்கிய சிறார்கள்..!! அந்தரங்க உறுப்பில் மிளகாய்பொடி தூவி கொடுமை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular