கரூர் | தனியார் பேருந்தில் இருந்து கீழே விழுந்த மாணவி படுகாயம்..!!

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர்பள்ளியைச் சேர்ந்தவர் பிரகாஷ் மகள் நேஷ்மிதா (14). இவர் நேற்று (ஜூன் 26) திருப்பராய்த்துறையில் இருந்து பள்ளி முடித்து தனியார் பேருந்தில் ஏறி வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். பேருந்தில் பயணிகள் அதிகளவில் இருந்தால் அவர் பேருந்து படிக்கட்டின் அருகே நின்றவாறு பயணம் செய்தார்.

அப்போது தண்ணீர்பள்ளி பட்டவர்த்தி வளைவு அருகே பேருந்து ஓட்டுனர் அதிவேகமாக ஓட்டி வந்து பிரேக் போட்டதில் படிக்கட்டு அருகே நின்று கொண்டிருந்த நேஷ்மிதா பேருந்தில் இருந்து கீழே தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து நேஷ்மிதா குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இதுகுறித்து நேஸ்மிதா தாயார் பானு அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

சூப்பர் சுவையில் வெஜ் மீன் குழம்பு செய்து பாருங்கள்..!! அசந்து போய்விடுவீர்கள்..!!

Read Next

திருமணமான பெண்கள் தாம்பத்திய வாழ்க்கையை பற்றி அறிந்து கொள்ள வேண்டிய ரகசியங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular