கரூர்: பெரும் சோகம்.. ஒன்றரை வயது குழந்தை ஒன்று வாய்க்காலில் விழுந்து உயிரிழப்பு..!!

கரூர்: பெரும் சோகம்.. ஒன்றரை வயது குழந்தை ஒன்று வாய்க்காலில் விழுந்து உயிரிழப்பு..!!

கரூரில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று வாய்க்காலில் விழுந்து இறந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணபதி – சித்ரா தம்பதியினர் கரூர் மாவட்டம், மாயனூரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தை நாய் கடித்து ஏற்கனவே இறந்துள்ளது. அதனால் மிகவும் மனமுடைந்த அவர்கள் ஆண் குழந்தை (கிஷாந்த் ) ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கிஷாந்த் இன்று (நவ 20) வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென்று காணாமல் போயுள்ளார். பின்னர் அருகே உள்ள வாய்க்காலில் இறங்கியிருக்கலாம் என சந்தேகித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து தேடியதில் குழந்தை உடல் சடலமாக மீட்கப்பட்டது. இந்த தம்பதிக்கு பிறந்த ஒரு குழந்தை நாய் கடித்து உயிரிழந்த நிலையில் தத்தெடுத்து வளர்த்த கிஷாந்த்தும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

BREAKING: ஆசிரியை ரமணியின் குடும்பத்தினருக்கு நிதியுதவி..!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

Read Next

தமிழ்நாடு வனத்துறையில் பணியிடங்கள் அறிவிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular