கரூர் மாவட்டம், வெங்கமேடு என் எஸ் கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி வயது 23.
இவர் ஜூலை 22 ஆம் தேதி மாலை 6: 45 மணி அளவில், வேலூர்- கரூர் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.
இவரது வாகனம் ரயில்வே பாலம் அருகே சென்றபோது, எதிர் திசையில், வெங்கமேடு என் எஸ் கே நகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் வயது 56 என்பவர் வேகமாக ஓட்டிவந்த மற்றொரு டூவீலர், கிருஷ்ணமூர்த்தி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிறு காயங்களுடன் தப்பிய கிருஷ்ணமூர்த்தி அருகிலுள்ள நிஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பாக கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் டூவீலரை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெங்கமேடு காவல்துறையினர்.