கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டுப்பட்டியில் நடைபெற்று வரும் துர்க்கை அம்மன் கோவில் திருவிழாவில் ரோந்து அலுவல் பணிக்கு கடவூர் தாசில்தார் இளம்பரிதி சென்று விட்டு மீண்டும் தரகம்பட்டியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அரசு காரில் வந்துள்ளார்.
எருதிகோன்பட்டி அருகே வந்தபோது கம்பளியம்பட்டியைச் சேர்ந்த வீரமணி (21), வெள்ளமுத்து (18) உள்ளிட்ட 4 பேர் மது போதையில் வழி மறித்துள்ளனர்.
இது குறித்து கேட்ட ஜீப் டிரைவர் மரியலாரன்ஸ் மற்றும் தாசில்தார் இளம்பரிதியை தகாத வார்த்தையால் திட்டி, கீழே கிடந்த கல்லை எடுத்து காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து கார் டிரைவர் மரிய லாரன்ஸ் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிபட்டி போலீசார் வீரமணி, வெள்ளமுத்து ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.