கர்நாடக அமைச்சர் வீட்டின் அருகே ஒருவர் வெட்டிக் கொலை..!!

கர்நாடக மாநிலம், பெங்களூரு லக்கசந்திராவில் இன்று (டிச.24) மாலை 7 மணியளவில் அமைச்சர் ராமலிங்கரெட்டி வீட்டின் அருகில் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டவர் பெயர் ஜெய்பிரகாஷ் என கூறப்படுகிறது. 2006ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கில் இவரது பெயர் அடிபட்டுள்ளது. பழைய முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அமைச்சர் வீட்டின் அருகே கொலை நடந்திருப்பது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசு..!!

Read Next

மும்பையில் பிரம்மாண்ட அலுவலகம் கட்டும் அட்லி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular