திருமணமான பெண்கள் கர்ப்பமான நேரங்களில் தங்கள் கர்ப்ப பதிவினை அங்கன்வாடி மையத்திலையோ அல்லது அரசு மருத்துவமனையிலோ பதிவு செய்து கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் கருத்தரித்த பெண்கள் தங்களின் கர்ப்ப பதிவினை இனிமேல் ஆன்லைனில் தாங்களே பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு வெளியிட்டுள்ளது, கர்ப்பிணியின் பெயர் இணைக்கப்பட்ட ஆதார் எண், கணவரின் பெயர் மற்றும் ஆதார் எண், மொபைல் எண், திருமண தேதி, மருத்துவ பதிவுகள் மற்றும் கர்ப்பிணி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை அமைந்துள்ள இடம் இவற்றை வைத்து ஆன்லைனிலேயே பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு வெளியிட்டுள்ளது..!!