
Oplus_131072
கர்ப்பிணி பெண்கள் பாராசிட்டமல் மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா..?? இல்லை எடுத்துக் கொள்ளக் கூடாதா..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!
பொதுவாகவே நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து கர்ப்பிணி பெண்கள் குறிப்பிட்ட உணவை தவிர்ப்பது மிகவும் நல்லது என்று கூறியிருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக கர்ப்பமாக இருக்கும் போது பப்பாளி பழம் சாப்பிடக்கூடாது எள்ளுருண்டை சாப்பிடக்கூடாது சிக்கன் அதிகமாக சாப்பிடக்கூடாது என பலவகையான கருத்துக்கள் இருக்கின்றன. இந்நிலையில் கர்ப்பிணிகள் பாராசிட்டமல் மாத்திரை சாப்பிடலாமா இல்லை சாப்பிடக்கூடாதா என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
கர்ப்பிணிகள் பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக் கொள்வது குழந்தைகளுக்கு ஏடிஹெச்டி குறைபாட்டை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக யூ எஸ் ஏ யூனிவர்சிட்டி நடத்திய ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது கர்ப்பமாக இருக்கும் 37 பெண்களிடம் இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது. இதில் பாராசிட்டமல் சிசுவின் மூளை வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே முடிந்தவரை பாராசிட்டமல் எடுப்பதை தவிர்த்து விடுங்கள். இல்லையென்றால் குறைவாக பயன்படுத்துவது குழந்தைக்கு ஏற்படும் ஆபத்தை குறைக்கும் என்று கூறப்படுகிறது.