கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்பட்ட திடீர் மரணம் கள்ளக்குறிச்சி அருகே உறவினர்கள் சாலை மறியல்…!!

கள்ளக்குறிச்சியில் கர்ப்பிணி பெண் ஒருவர் திடீரென உயிரிழந்தார். அவரது உடலை உடற்கூராய்வு செய்யாததை கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை சேத்தூர் கிராமத்தில் வசித்து கொண்டு வருபவர் ராமச்சந்திரன். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சுதா, நேற்று முன் தினம், பரிசோதனை செய்து கொள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். அப்போது மருத்துவர்கள், பிரசவத்திற்கு இன்னும் 20 நாட்கள் இருப்பதாக கூறி உள்ளனர்.

இதை அடுத்து சுதாவும், ராமச்சந்திரனும் கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு பேருந்தில் கல்வராயன்மலைக்கு சென்று கொண்டிருந்தனர். மாவடிப்பட்டு அருகே செல்லும் போது, சுதாவுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டு உள்ளது. உடனே ராமச்சந்திரன் பேருந்தை நிறுத்தி, அருகில் இருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காண்பித்தார்.

அங்கு சுதாவை பரிசோதித்த மருத்துவர் அவரை மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சுதா இறந்து விட்டார். இதைத் தொடர்ந்து சுதாவின் உடல் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.

சுதாவுக்கு திருமணமாகி ஒரு வருடம் மட்டுமே ஆனதால், கோட்டாட்சியர் விசாரணை நடத்த வேண்டும், ஆனால் நேற்று மாலை வரை விசாரணை நடத்த கோட்டாட்சியர் வரவில்லை. இதனால் நேற்று மாலை 6.30 மணி வரை சுதாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த சுதாவின் உறிவினர்கள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு சாலை மறியல் செய்தனர். அப்போது அவர்கள் சுதாவின் உடலை உடற்கூராய்வு செய்யாததை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

இது குறித்து அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் சூப்பிரண்டு மோகன்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் உடனடியாக உடற்கூராய்வு செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார். எனவே உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து சுதாவின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த மறியலால் அந்த பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Read Previous

டிரிபிள்ஸ் சென்றவர்களை போட்டோ எடுத்த இளைஞர்.! வெளுத்து வாங்கிய பெண்கள்..! அடையாறில் அட்ராசிட்டி.!!

Read Next

#BigBreaking: அமைச்சர் பொன்முடிக்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; விபரம் உள்ளே.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular