கறிவேப்பிலையை உணவில் சேர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன.? விபரம் இதோ.!!

தினமும் நாம் சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கருவேப்பிலை தன்னகத்தே பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. இதில் உள்ள கால்சியம், புரதம், இரும்பு சத்து, விட்டமின் பி1, பி2 விட்டமின் சி ஆகியவை உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கின்றன.

இதனால் பல உடல் சார்ந்த நோய்கள் சரியாகின்றது. கருவேப்பிலையில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்கள் சர்க்கரை நோய் எதிர்ப்பு தன்மை கொண்டது. நுண்ணுயிர் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் இதில் நிறைந்து உள்ளது. இரும்புச்சத்து, போலிக் அமிலம் நிறைந்து காணப்படுவதால் ரத்தசோகை பிரச்சனை சரியாகும்.

உணவில் சேர்க்கப்படும் கருவேப்பிலையை ஒதுக்கி வைப்பவர்களுக்கு அவர்களுக்கே தெரியாமல் அதனை சட்டினி அல்லது தோசை பொடி வடிவில் அரைத்து கொடுத்து சாப்பிட வைக்கலாம். இதனால் பல்வேறு நன்மைகள் உங்களின் அன்புக்குரியவர்களுக்கு கிடைக்கும்.

Read Previous

கோடையில் அடிக்கடி கீரைகளை சாப்ப்பிடுவதால் என்னாகும் தெரியுமா.?

Read Next

வியர்க்குரு பிரச்சனையால் அவதிப்படுறீங்கா..? அசத்தல் டிப்ஸ் இதோ.. குழந்தைகளுக்கும் நல்லது.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular