
தற்போதைய காலகட்டத்தில் கலப்பு திருமணங்கள் என்பது அதிக அளவில் வளர்ந்துள்ளன. மேலும், இந்த கலப்பு திருமணம் செய்தவர்களை பெற்றோர்கள் மற்றும் சில சமூகத்தை சேர்ந்தவர்கள் ஒதுக்குகின்றனர். இதனால், அவர்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைக்காமல் வறுமையில் வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில், அவர்களுக்கு உதவும் விதமாக “டாக்டர். அம்பேத்கர் கலப்பு திருமண உதவி தொகை திட்டம்” என்ற திட்டமானது அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது கலப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் ரூ. 2.5 லட்சம் வரை நிதி உதவி வழங்குகிறது. கலப்பு திருமணம் செய்து கொண்ட நீங்கள், இந்த திட்டத்தில் விண்ணப்பித்தவுடன், உங்களுக்கு ரூ.1.5 லட்சம் வழங்கப்படும். மீதமுள்ள ரூ.1 லட்சம், உங்கள் 5 வருட திருமண வாழ்க்கைக்கு பின் வழங்கப்படும். இந்த திட்டத்தில் எப்படி விண்ணப்பிப்பது, என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பதை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம்.
2. குறைந்தபட்ச 5 வகுப்பு முதல் அதிகபட்சம் 10ம் வகுப்பு வரை படித்தவர்களாக இருக்க வேண்டும்.
3. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
4. ஆண்கள் 21 வயது மற்றும் பெண்கள் 18 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
1. ambedkarfoundation.nic.in
2. ஆதார் அட்டை, குடியிருப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, மொபைல் நம்பர், மின்னஞ்சல் id மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.
3. உங்கள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதும், ரூ. 1.5 லட்சம் உங்களுக்கு வழங்கப்படும்.