கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்குமா..? நடிகர் பிரகாஷ்ராஜ்..!!

“சூட்டிங்க்கு மக்கள் வருவதை பார்த்து உள்ளேன் ஆனால் மோடி சூட்டிங்க்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறார்” நடிகர் பிரகாஷ்ராஜ் பேச்சு.

சென்னையில் உள்ள ராஜா அண்ணாமலை மண்டபத்தில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை நடிகர் பிரகாஷ்ராஜ் திறந்து வைத்துள்ளார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் “கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால் இன்று நான் பேச வேண்டிய அவசியம் என்பது இருந்திருக்காது.  அவர் இருக்கும் வரை யாராலும் வாலாட்ட முடிய வில்லை. கலைஞர் இல்லை எனில் நான் ஐஏஎஸ் ஆகியிருக்க முடியாது என ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் என்னிடம் கூறியுள்ளார்.

சாதி, பணம் வைத்து அரசியல் செய்வது வேறு,  கலைஞர் கொள்கையை வைத்து அரசியல் செய்தவர். கலைஞர் இருந்தார் என்ற செய்தியை காட்டிலும் அவர் எதற்காக கலைஞர் ஆனார்,? என்பதே முக்கியம். நான்  பல்வேறு சூட்டிங்கில்  மக்கள் வருவதை பார்த்து உள்ளேன் ஆனால் குமரியில் பிரதமர் மோடி ஷூட்டிங்க்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறார்”, என கூறியுள்ளார்.

Read Previous

கோவையில் சோகம்..!! வீட்டு ப்ரோக்கர் விஷம் அருந்தி தற்கொலை..!! காரணம் இதுவா..? முழு விவரம் உள்ளே..!!

Read Next

மாணவ மாணவிகளுக்கு புதிய வங்கி கணக்கு தொடக்கம்..!! தமிழக பள்ளி கல்வித்துறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular