
குமரி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற விண்ணப்ப பதிவு முகாம் 2 கட்டமாக நடக்கிறது. இதையடுத்து முதல் கட்டமாக முகாம் நடைபெற உள்ள 400 ரேஷன் கடைகளுக்குட்பட்ட ரேஷன் கார்டுதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஊழியர்கள் மூலமாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு வீடு வீடாக சென்று வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்று 24-ந்தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் பொதுமக்களிடமிருந்து வாங்கப்பட்டது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, கல்குளம் தாலுகாவுக்குட்பட்ட 400 இடங்களில் சிறப்பு முகாம் நடந்தது.
நாகர்கோவில் மாநகர பகுதிகளிலும் கலைஞர் உரிமை திட்டத்திற்கான சிறப்பு முகாம் இன்று நடந்தது. ஏற்கனவே விண்ணப்ப படிவங்கள் கொடுக்கப்பட்ட நிலையில் பெண்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொண்டு வந்திருந்தனர். இதில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.