
கல்யாணம் பண்ணிப்பார்
ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாட்கள்
தொண்ணூறு நாட்கள் வரை புது பொண்ணு மாப்பிள்ளையாக வலம் வரலாம்.
உலக அழகியே மனைவி என்றாலும்
உலகத்தின் ஆணழகனே புருஷன் என்றாலும் பார்க்க பார்க்க காதல் மட்டுமே என்றால் ஒரு நேரத்திற்கு பிறகு
தெவட்ட தான் செய்யும்.
ஏனெனில் பழக பழக
பாலும் புளித்து தயிர் ஆக தான் செய்யும்.
புளித்து தயிர் ஆனாலும் பொறுத்திருந்தால் தயிர் வெண்ணெய் ஆகி இறுதியாக மணக்கும் நெய் ஆகும்.
இதுதான் காதலில் வாழ்க்கையை கரைத்து விடாமல் பொத்தி பொத்தி பொறுத்து போய் காதலை விட
அன்பு மட்டுமே வலுவானால்
நெய் போல தாம்பத்யம் மணக்கும்.
புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் சின்ன சின்ன சண்டை வரத்தான் செய்யும்.
சண்டை வரும்..
அதை பூதாகரமாக்கி டைவர்ஸ் வரைக்கும் இழுத்துட்டு போய் விடுவதென்னவோ இரு வீட்டில் உள்ள பெற்றோர்களும் உறவினர்களுமே.
புருஷன் பொண்டாட்டின்னா சண்டைலாம் வரத்தான் செய்யும்..
அது உங்க பாடுன்னு கண்டுக்காம போறதுதான் நல்ல பெற்றோருக்கு அழகு.
அத விட்டுட்டு ஐயோ என் பொண்ணு எப்பேர்பட்ட குணவதி அவளுக்கு போயி இப்படில்லாம் ஆகணுமா..
போயும் போயும் அவனுக்கு போயி கட்டிவச்சுட்டனேன்னு இவங்க அனத்தும் போது..
இதெல்லாம் அந்த பெண்ணுக்கு ”ஹப்பாடி நம்ம சைட் தப்பில்லன்னு நம்பிட்டாங்க”ன்ற மாதிரியான மனநிலை கொடுக்கும்.
அதே போலதான் பையன் வீட்டிலும்.. ரெண்டு பேர் வீட்லயும் ரெண்டு பேரையும் உயர்த்தி உயர்த்தி பேசி ஏதோ தனக்கு பொருத்தமில்லாதவங்கள கட்டி வச்சுட்டதாகவும் இத்தனை நாள் சகித்து தியாக வாழ்வு வாழ்ந்ததாகவும் நம்ப வச்சிடுவாங்க.
அந்த உயர்ந்த பிம்பத்திற்கும். ஒரு பாவப்பட்ட ஆள் என்ற கழிவிரக்கதிற்கும் ஆசைப்பட்டு இவங்களும் நம்ப ஆரம்பிச்சிடுவாங்க.. டைவர்ஸ் ஆகிடும்..
ஆனா அதுக்கப்பறம் கொஞ்ச நாள் கழிச்சு சொந்த புத்தி வேலை செஞ்சு யோசிக்கும். அதான் நரகம்.
பொதுவா டைவர்ஸ் என்பதை எல்லாம் ரெண்டு பேரும் உக்காந்து பேசி செட்டே ஆகாதுன்னு தெரிஞ்ச அப்பறம் எடுக்க வேண்டிய முடிவு..
அதல்லாம மற்றவர்களும் பெற்றவர்களும் உங்கள் இணை குறித்து சொல்லும் குறைகளையும் உங்களை குறித்து சொல்லும் நிறைகளையும் மனதில் போட்டு ஒப்பிட்டு பிரியும் முடிவு எடுப்பதெல்லாம் மடத்தனம்.
நம்ம இணையும் பெர்பெக்ட் கிடையாது நாமளும் பெர்பெக்ட் கிடையாதுன்ற புரிதல் முதல்ல வேண்டும்.
அதற்கு அப்பறம்தான் ஒரு பிரச்சினைய அணுகனும்.
இந்த டைவர்ஸ் எண்ணங்களை கடந்துதான் எல்லாருமே இப்போது குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கின்றார்கள்.
இன்று அவர்கள் ஆதர்ச தம்பதிகள்.
இந்த நிலையை அடைவதற்கு அவர்கள் இருவரில் யாரோ ஒருவர்தான் காரணம்.
அட்ஜஸ்ட்மென்ட்.
அப்படி என்னத்துக்கு அட்ஜஸ்ட் செஞ்சு குடும்பம் நடத்தனும்ன்னு திமிராக கேள்வி வருதா?
கல்யாணம் என்பதே அட்ஜஸ்ட்மென்ட்களால் ஆனதுதான். அப்படி அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வக்கில்லன்னா என்னத்துக்கு கல்யாணம் முடிச்ச என்ற பதில் கிடைக்கும்.
உங்களால் யாரையும் அட்ஜஸ்ட் செஞ்சு போக முடியாது. சுயகவுரவம் அதிகமா இருக்கு அப்படில்லாம் நினைச்சிங்கன்னா.. very sorry அட்ஜஸ்ட் செய்யாம வெறும் சுயத்தை வச்சிக்கிட்டு இங்கு யாராலும் வாழவே முடியாது.
ஏதாவது ஒரு வகையில் யாருக்காவது வளைந்துகொடுத்துதான் வாழ்ந்து
கொண்டிருக்கின்றிர்கள்..
அதே வளைவை கல்யாணத்துக்கும் செய்யமுடியும் என்றால் மட்டுமே கல்யாணம் என்ற அமைப்பிற்குள் செல்லுங்கள்..
இல்லியா தனியா கெத்தா வாழ்ந்து பாருங்கள் அந்த வாழ்க்கை நரகம் என்பது போக போக புரியும்.
கேட்பார் பேச்சு கேட்காமல் அட்ஜஸ்ட் செய்து வாழ்ந்து பாருங்கள் அதுதான் சொர்க்கம்.