மனிதனாய் பிறந்த அனைவருக்கும் திருமண வாழ்க்கை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி திருமணம் என்பது நமது வாழ்க்கையில் நமக்கென்று ஒரு வாழ்க்கை துணையை தேர்வு செய்வதாகும். அத்தகைய வாழ்க்கை துணை சரியாக அமைய வேண்டும் என்பது அனைவருக்கும் ஒரு மிக பெரிய வேண்டுதலாக உள்ளது. நமது நாட்டில் உள்ள பெண்களோ, ஆண்களோ நல்ல வாழ்க்கை துணை அமைய வேண்டும் என்று கோவிலுக்கு சென்று கடவுளிடம் வேண்டுகின்றனர். ஆனால் அண்டைய நாட்டில் இதற்கென ஒரு தனி பல்கலைக்கழகத்தை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்யாண காலேஜ்:
சீனாவின் பெய்ஜிங் என்ற மாகாணத்தில் சிவில் என்ற ஒரு பல்கலைக்கழகத்தில் திருமணத்திற்காகவே ,திருமண சேவைகள் மற்றும் மேலாண்மை என்ற இளநிலை பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவில் திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதால் இத்தகைய படிப்பை துவங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த இளநிலை படிப்பு குடும்ப வாழ்க்கை, திருமண கலாச்சாரத்தை மாணவர்கள் மக்களிடையே எடுத்துரைத்து திருமண பழக்க வழக்கங்களில் சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.