கல்யாண வீடுகளில் ரசம் ருசியாக இருப்பதன் ரகசியம் இதுதான்..!!

கல்யாண வீடுகளில் ரசம் ருசியாக இருப்பதன் ரகசியம்..

வெறும் வாணலியில் தனியா – 2 டீஸ்பூன், மிளகு – ஒரு ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – 6 இதழ்கள் வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடிக்க வேண்டும்.

அடுத்து வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு நறுக்கிய தக்காளி – 2, நறுக்கிய பூண்டுப் பல் – ஒன்று, கறிவேப்பிலை இலைகள் 3 சேர்த்து வறுக்கவும்.புளிக்கரைசல் – கால் கப், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், தேவையான அளவு நீர்விட்டு இரண்டு கொதிவிட்டு கால் கப் வெந்து மசிந்த துவரம்பருப்புக் கரைசல் ஊற்றி ஒரு கொதி வந்ததும் பொடித்துவைத்துள்ள பொடியைத் தூவி, இறுதியில் உப்பு சேர்க்கவும். வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய்விட்டு கடுகு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை 3 இதழ்கள் வறுத்து கொதிக்கும் ரசத்தில் சேர்த்து இறக்கவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சிறிதளவு தூவவும்.

Read Previous

கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பதிவு..!! கட்டாயம் படிங்க..!!

Read Next

நாட்டு சக்கரைக்கும் வெல்லத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular