
Oplus_131072
கல்லீரலில் கொழுப்பு சேருவதற்கான காரணங்கள் என்னென்ன?
பெரும்பாலான மக்கள் தங்கள் கல்லீரல் பாதிக்கப்பட்டு உள்ளதை அறிவதே இல்லை. கல்லீரல் பாதிப்பு முற்றிய பிறகே அதன் அறிகுறிகளை அவர்கள் காண்கிறார்கள். எனவே இதைக் களையும் நோக்கத்தோடு ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய சாதனத்தை கண்டறிந்துள்ளனர்.
கொழுப்பு கல்லீரல் நோய் அல்லது கல்லீரல் ஃபைப்ரோஸிஸைக் கண்டறிய பயன்படும் நியூக்ளியர் காந்த அதிர்வு (என்.எம்.ஆர்) (Nuclear Magnetic Resonance) அடிப்படையில் கண்டறியும் கருவியை ஆராய்ச்சியாளர்கள் தற்போது உருவாக்கியுள்ளனர்.
இந்த சாதனம், திசு வழியாக நீர் எவ்வாறு பரவுகிறது என்பதை அளவிட பயன்படுகிறது.
சுமார் ஒரு கிலோ எடை கொண்ட இது மிகவும் மென்மையான உறுப்பாகும். செம்பழுப்பு நிறத்துடன் காணப்படும். கல்லீரல் வயிற்றின் மேல் பகுதியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத்துள்ள உணவுப்பொருட்கள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்தநீரை உற்பத்தி செய்வது கல்லீரல்தான். கொழுப்பு சேரும் காரணங்கள் :
அதிகம் மது அருந்துவது.
மதுப் பாவனையைத் தவிர வேறு காரணங்களும் ஈரலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
பொதுவாக எடை அதிகமாக உள்ளவர்களிடம் இது ஏற்படுகிறது.
தவறான உணவு முறை மற்றொரு முக்கிய காரணமாகும்.
ஈரல் கொழுப்புக்குக் காரணம் உணவில் கொழுப்பு அதிகமாக இருப்பதே என்பதை ஊகிப்பது சிரமமல்ல.
அதிலும் முக்கியமாக ரான்ஸ் (Trans fats – trans fatty acids) கொழுப்பு முக்கிய காரணமாகும்.
இரும்புச் சத்து அதிகமாகும்போதும் இது நேரலாம்.
ஹெபடைடீஸ் பீ (Hepaptitis B) எனும் வைரஸ் ஈரல் அழற்சியின் பின்னரும் இது ஏற்பட வாய்ப்புண்டு.
மது அல்லாத காரணங்களால் ஏற்படும் ஈரல் கொழுப்பு நோய்
இப்பொழுதெல்லாம் மதுவைத் தொடாத பலரிலும் காண முடிகிறது. இது பற்றியே இங்கு அதிகம் பேசுகிறோம். ‘மது அல்லாத காரணங்களால் ஏற்படும் ஈரல் கொழுப்பு நோய்’ (Nonalcoholic Fatty Liver Disease -NAFLD) என்பார்கள்.
பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல் ஆங்காங்கே படிந்து ரத்தத்தின் மூலம் எல்லா உறுப்புகளுக்கும் சென்றடைந்து விடும்.
உங்களுக்கு ஹெபடைடிஸ் இருந்தால் கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் இந்த வகை சாதனத்தை பயன்படுத்துவது நல்லது. இதுவரை இந்த கருவி தற்போது எலிகளில் பரிசோதிக்கப்பட்டு இருக்கிறது.
இது ஃபைப்ரோஸிஸிற்கு முன்னேறுவதற்கு முன்பு கொழுப்பு கல்லீரல் நோயைப் கண்டுபிடிக்க மருத்துவர்களுக்கு உதவக்கூடும் என்று நேச்சர் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.