• September 24, 2023

கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு..!!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அன்சார் அலி. இவருடைய மகன் அன்வர் அலி (18). இவர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி. ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி விடுமுறையையொட்டி அன்வர் அலி தனது வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் தனது வீட்டின் அருகே உள்ள மரத்தில் மாங்காய் பறிக்க முயன்றார். அப்போது பக்கத்து வீட்டுக்காரரான தாஜ்தீன் (50) என்பவருடன் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த தாஜ்தீன், அவருடைய மகன் ஜாகீர் உசேன் (35) ஆகியோர் அன்வர் அலியின் தலையில் அரிவாளால் வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அன்வர் அலியை அப்பகுதி மக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல் அன்வர் அலி தாக்கியதில் தாஜ் தீன் காயம் அடைந்ததாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் குறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

தந்தையை தாக்கிய மகன் கைது..!!

Read Next

வாடகை காதலியை தொடர்ந்து வாடகை மனைவி..!! ஜப்பானில் வெளியான தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular