கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை..!! போலீசார் விசாரணை..!!
கர்நாடகா மாநிலமை் HSR லேஅவுட் பகுதியில் தனியார் கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனது நண்பர்களுடன் இணைந்து பார்ட்டி கொண்டாடியதாகக் கூறப்படுகிறது. பின்னர் பார்ட்டி முடிந்து ஸ்கூட்டில் வீடு திரும்பும்போது கீழே விழுந்துள்ளார். பின்னர் அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறி செல்லும்போது மாணவி போதையில் இருந்ததை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் தனது நண்பர்களை வரவழைத்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.