தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தனியார் கல்லூரி மாணவி மர்ம மரணம் அடைந்தது அப்பகுதியில் உள்ள மக்களை பெரும் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் மோதிலால் பகுதியில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. அந்த விடுதியில் பலரும் வந்து தங்கி செல்வது உண்டு. இந்த நிலையில், மன்னார்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் மாணவியும் மற்றும் மயிலாடுதுறை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவனும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் இருவரும் கும்பகோணம் மோதிலால் தெருவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கினர்.
இந்நிலையில் இன்று காலையில் திடிரென்று மாணவிக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார் அப்பெண்ணின் காதலன். அவர்களை பார்த்து சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறினர். பின், கும்பகோண அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார் அப்பெண்ணின் காதலன். பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.அதைக்கேட்ட காதலன் தப்பிஓட முயன்ற போது மருத்துவர்கள் அவனை சுற்றிவளைத்தனர்.
போலீஸ் விசாரணையில்..
நடந்த சம்பவத்தை மருத்துவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவன் கூறியது, “நங்கள் இருவரும் காதலர்கள், வீட்டில் கல்லூரிக்கு போவதாக சொல்லிவிட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்கினோம், அப்போது மின்சாரம் தாக்கி என் காதலி கீழே விழுந்ததாக கூறியுள்ளார். மேலும், தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகிறது காவல்துறை. அந்த பெண்ணுக்கு நடந்தது கொலையா?? தற்கொலையா?? என்பது தொடர் விசாரணையில் தெரியவரும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.