கல்விக்கட்டணத்தை கேட்டு நெருக்கடி, தகாத பேச்சு..!! திருச்சியில் கல்லூரி மாணவி தற்கொலை..!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள இருங்கலூர் பகுதியில் செயல்பட்டு வருகின்ற தனியார் செவிலியர் கல்லூரியில் பயின்று வரும் மாணவி சத்தியபிரித்தி. (வயது 20) இவர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலையை சார்ந்தவார் ஆவார்.

தற்பொழுது படிப்புக்காக திருச்சி மாவட்டத்தில் உள்ள இருங்கலூர் பகுதியில் செயல்பட்டு வருகின்ற தனியார் செவிலியர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகின்றார். இவரின் தந்தை முருகேசன், இந்நிலையில் நேற்று மாணவி பிரீத்தி தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் பெற்றோர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறை அதிகாரிகள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாணவி சத்தியபிரிதியிடம் கல்லூரி நிர்வாகம் கல்வி கட்டணம் செலுத்த கூறி நெருக்கடி கொடுத்து வந்ததாகப்படுகிறது. மேலும் நிர்வாக மாணவி அவதூறாக பேசி, தகாத வார்த்தையால் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார் என்றும் விசாரணையில் தெரிய வந்தது. இந்த தகவலை மாணவியுடன் பயின்று வரும் சக மாணவிகள் மாணவியின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.

Read Previous

என்னது பாண்டவர் இல்லம் நடிகைக்கு விவகாரத்தா?.. தனியொரு பெண்மணியாக சாதனை..!! இதுதாங்க தரமான சம்பவம்.!!

Read Next

ஸ்பெஷல் கிளாஸ் நடத்துவதற்காக பள்ளிக்கு சென்ற உதவி தலைமை ஆசிரியர்..!! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி.,!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular