கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம் உடலுறவு கொள்ள மறுப்பு தெரிவித்ததால் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி குத்தி கொலை செய்த கள்ளக்காதலன் காவல்துறையால் கைது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சிறுகாம்பூர் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார் இவரின் மனைவி சுமதி (வயது 42). தம்பதிகளுக்கு பல வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது. தம்பதிகள் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையினை நடத்தி வந்தனர். இந்நிலையில் ஜவுளிக்கடை ஒன்றில் பணியாற்றி வந்த சுமதி தினமும் பணிக்கு சென்று வரும்போது மாரிமுத்து (வயது 30) என்பவருடன் நட்பாக பழகினார்.
இந்த நட்பு காலப்போக்கில் கள்ளக்காதலாய் மாறியது. இதனால் அவ்வப்போது இருவரும் உல்லாசமாகவும் இருந்து வந்தனர். இந்த சம்பவம் சுமதியின் உறவினர் ஒருவருக்கு தெரிய வந்தது. அவர் சுமதிக்கு அறிவுரை வழங்கி கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியுள்ளார். இதனால் மாரிமுத்துவிடம் சுமதி பேசுவதை மறுத்துள்ளார்.
இதனிடையே இறுதியாக நாம் ஒரே ஒரு முறை உல்லாசமாக இருக்கலாம் என்று கள்ளக்காதலன் மாரிமுத்து சுமதிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு சுமதி மறுப்பு தெரிவித்த காரணத்தால் இன்று காலை சிறுகாம்பூர் பேருந்து நிலையத்தில் சுமதியை மாரிமுத்து ஓட ஓட விரட்டி குத்தி கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சுமதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.