
கள்ளக்காதலை கண்டித்த மாமியார்..!! பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மருமகள்..!!
விழுப்புரம்: ராணி (47) என்பவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது உடலில் தீப்பற்றியதால் அலறி துடித்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மருமகள் சுவேதாவிடம் (20) போலீஸார் நடத்திய விசாரணையில், “எதிர்வீட்டு சதீஷ்குமாருடன் இருந்த கள்ளத்தொடர்பை எனது மாமியார் கண்டித்தார். அதனால், சதீஷ்குமாருடன் சேர்ந்து எனது மாமியாரை திட்டமிட்டு பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றேன்” என வாக்குமூலம் அளித்துள்ளார்.