ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தின் மாண்ட்லா கிராமத்திற்கு அருகே கடந்த ஜூன் 19ஆம் தேதி ஒரு பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்த பெண் உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் வர்ஷா என போலீசார் அடையாளம் கண்டனர். இது குறித்து விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. திருமணத்தை மீறிய உறவில் இருந்த விஷால் என்பவரை அவரது மனைவி வர்ஷா கண்டித்துள்ளார். இதனால், நண்பருடன் சேர்ந்து வர்ஷாவை சுட்டுக் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.