கள்ளக்குறிச்சி அருகே பயங்கரம்..!! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை வெட்டிக்கொன்ற மர்ம கும்பல்..!! போலீஸ் வலைவீச்சு.!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராதாகிருஷ்ணன் அன்னபூரணி தம்பதியினர். இவர்களுக்கு சந்தோஷ் குமார், ராஜேஷ் என்கின்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் நான் சந்தோஷ் குமாருக்கு திருமணம் ஆகி மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது தாய் தந்தையுடன் இணைந்து வாழ்கிறார். மேலும் இவர்களது இரண்டாவது மகன் ராஜேஷ் பெங்களூருவில் பணிபுரிந்து வருகிறார்.

இதனால் இவர் தினமும் தனது தாய் ,தந்தை மற்றும் அண்ணனை தொடர்பு கொண்டு செல்போனில் பேசுவதை வழக்கமாய் கொண்டுள்ளார். இந்நிலையில் சம்பவ தன்று ராஜேஷ் அவர்கள் மூன்று பேருக்கும் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் யாரும் போனை எடுக்காததால் சந்தேகம் அடைந்த ராஜேஷ் தனது உறவினரை விட்டு வீடு வரை சென்று பார்க்க கூறியுள்ளார்.

அப்போது அங்கு சென்ற உறவினர் வீடு பூட்டப்பட்டிருப்பதை கண்டு தோட்டத்திற்கு சென்று பார்த்தார். அங்கு அவர்களின் பைக், உரம் மற்றும் மண்வெட்டி ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் வைக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவர்கள் மூவரும் அங்கு காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர் விவசாய நிலத்தில் உள்ள கரும்பு பயிர்களுக்கு இடையே சென்று தேடி பார்த்தார். அப்போது அங்கு ராதாகிருஷ்ணன், சந்தோஷ் குமார் மற்றும் அன்னபூரணி ஆகிய மூன்று பேர் உடலில் வெட்டுக்காயங்களுடன் அழுகிய நிலையில் சடலமாய் கிடந்தனர்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் மூவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பலை தீவிரமாய் தேடி வருகின்றனர்.

Read Previous

ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் பாலக்கீரையின் அற்புத நன்மைகள்.!!

Read Next

பேச மறுத்த இளம் பெண்..!! வற்புறுத்திய இளைஞர்..!! பின்னர் நடந்த கொடூர சம்பவம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular