கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய் விவகாரம்..!! பாமக மற்றும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து அதை வாங்கி குடித்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் இன்று வரை 57 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேரின் நிலை உடல் நிலை கவலைக்கிடமாய் உள்ளது. மேலும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கண்டணம் தெரிவிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில் கோவை, நாமக்கல், சேலம் ஆகிய அனைத்து மாவட்டங்களிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாமக்கலில்  நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் எல் முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்பொழுது அவர் பேசியது “தமிழக காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் மு க ஸ்டாலின் இந்த கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொறுப்பேற்று துறை அமைச்சரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்”, என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து கோவையில் காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து ராம் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர். அப்போது அங்கு வந்த பாஜக தலைவர் அண்ணாமலை “கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பாஜக நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் காவல்துறை அனுமதி மறுத்துள்ளதை தொடர்ந்து பாஜகவினர் ஜூன் 24 அன்று தமிழக ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளோம். மேலும் திமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்”, என்று தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி திமுக எம்எல்ஏக்கள் இருவரை கண்டித்து கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு அனைவரையும் காவல்துறையினர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Previous

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி இதை யாராலும் கடந்து போக முடியாது..!! செல்வப் பெருந்தகை பேச்சு..!!

Read Next

கள்ளக்குறிச்சி மட்டுமல்ல தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை அமோகம்..!! இதுவரை 808 பேர் அதிரடி கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular