கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி மரணம் அடைந்தவர்கள் விவகாரத்தில் மேலும் இரண்டு போலீஸ் டிஎஸ்பிகள் உள்ளிட்ட ஒன்பது போலீசாருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளனர். இது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தை சார்ந்த 229 பேர் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சேலம் மருத்துவமனை, கள்ளக்குறிச்சி மருத்துவமனை என பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி பெற்றனர். இதில் கல்லீரல், சிறுநீரகம் செயலிழப்பு, நரம்பு மண்டலம் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டு கடும் உடல் உபாதைகளுக்கு உட்பட்டு 65 சிகிச்சை பலனின்றி இதுவரை உயிரிழந்துள்ளனர். தற்பொழுது வரை 40 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினதாகவும் தகவல்கள் வெளிவந்தது.
இந்த வழக்கில் ஏற்கனவே 20க்கு மேற்பட்டோர் சிபிசிஐடி போலீஸ் அதனால் கைது செய்யப்பட்டு விசாரணைணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கை சிபிசி சிபிஐ விசாரணை செய்தால் தான் கள்ளச்சாராய பின்னணியில் உள்ளவர்கள் வெளி வருவார்கள் அவர்களையும் கைது செய்ய முடியும் என திமுகவை சேர்ந்த ரெண்டு எம்எல்ஏக்களின் ஆதரவோடு தான் இந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அதிமுக மற்றும் பாஜக ,பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி விவகாரத்தில் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்ட இரண்டு டிஎஸ்பிக்கள் உட்பட ஒன்பது போலீசாரிடம் விசாரணை நடத்த சிவிசிஐடி போலீசார் முடிவு செய்து அவர்களுக்கு தனித்தனியாக சம்மன் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் போலீசார் உடந்தையாக செயல்பட்டது தெரியவரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.