கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்..!! நேரில் சென்று ஆறுதல் கூறிய இளைய தளபதி விஜய்..!!

கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதை தொடர்ந்து அதை வாங்கி அருந்திய பலரும் வாந்தி மயக்கம் என ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பலரும் பரிதாபாய் உயிரிழந்தனர். பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 39 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட 125க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணை ஆணையம் அமைக்க தமிழக முதல்வர் முதல் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தல 10 லட்சமும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா 50,000 வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களை நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் விஜய் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டு இருப்பது “கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியையும். மனவேதனையும் அளிக்கின்றது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு குணம் அடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாக பல்வேறு உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்”, என குறிப்பிட்டுள்ளார்.

Read Previous

விமான பயணத்தின் போது மது அருந்தினால் என்ன ஆகும்..? முழு விவரம் உள்ளே..!!

Read Next

நீட் தேர்வு எழுதிய மாணவர்களை ராகுல் காந்தி நேரில் சந்திப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular